வியாழன், 11 ஏப்ரல், 2013

உன் இருவிழி பார்வை போதுமடி


அணுக்கரு உலையடி இதயம்
   அளித்திட வேண்டுமே உபயம் - உன்னை
நினைத்திடும் ஒவ்வொரு நிமிடம்
   ஆற்றலை உமிழ்ந்திடும் தருணம்
நியூட்ரான் அன்பினால் தாக்கினாய்
   யுரேனியத் தீயினை மூட்டினாய்
காட்மியத் தகடுகள் ஏற்றினாய் - பின்
   காதலின் கனநீர் பாய்ச்சினாய்
எரிபொருள் ஏதும் தேவையில்லை - உன்
   இருவிழிப் பார்வை போதுமடி
மறுபதில் என்பது ஏதுமின்றி - என்
   மனமது வினைகளைத் தொகுத்திடுமே...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக