http://www.WorkPayment.com/?invite=47793
senthamil bala
சனி, 28 செப்டம்பர், 2013
வெள்ளி, 3 மே, 2013
கொட்டுது பாரங்கு மழைநீரு
எங்கள் தாகம் தணிக்கின்ற தண்ணீரு
கல்லில் பட்டுத் தெறிக்குது பன்னீரு அதில்
பறந்து போகும் எங்கள் கண்ணீரு
காகம் கரையுது காட்டுக்குள்ளே சின்ன
நண்டு நுழையுது சேற்றுக்குள்ளே
தங்கத் தமிழர்கள் வீட்டுக்குள்ளே
மனம் சுற்றுது மழைநீன்ச்ன் பாட்டுக்குள்ளே
சொட்டு சொட்டாகத்தான் ஒன்று சேர்த்து நாங்கள்
செட்டாக மழைநீரை சேகாச்ப்போம்
நிலத்தடி நீன்ச்னை உயர்த்திடுவோம் நித்தம்
இறக்கின்ற இயற்கைக்கு உயிர் கொடுப்போம்
எங்கள் தாகம் தணிக்கின்ற தண்ணீரு
கல்லில் பட்டுத் தெறிக்குது பன்னீரு அதில்
பறந்து போகும் எங்கள் கண்ணீரு
காகம் கரையுது காட்டுக்குள்ளே சின்ன
நண்டு நுழையுது சேற்றுக்குள்ளே
தங்கத் தமிழர்கள் வீட்டுக்குள்ளே
மனம் சுற்றுது மழைநீன்ச்ன் பாட்டுக்குள்ளே
சொட்டு சொட்டாகத்தான் ஒன்று சேர்த்து நாங்கள்
செட்டாக மழைநீரை சேகாச்ப்போம்
நிலத்தடி நீன்ச்னை உயர்த்திடுவோம் நித்தம்
இறக்கின்ற இயற்கைக்கு உயிர் கொடுப்போம்
வியாழன், 11 ஏப்ரல், 2013
உன் இருவிழி பார்வை போதுமடி
அணுக்கரு உலையடி இதயம்
அளித்திட வேண்டுமே உபயம் - உன்னை
நினைத்திடும் ஒவ்வொரு நிமிடம்
ஆற்றலை உமிழ்ந்திடும் தருணம்
நியூட்ரான் அன்பினால் தாக்கினாய்
யுரேனியத் தீயினை மூட்டினாய்
காட்மியத் தகடுகள் ஏற்றினாய் - பின்
காதலின் கனநீர் பாய்ச்சினாய்
எரிபொருள் ஏதும் தேவையில்லை - உன்
இருவிழிப் பார்வை போதுமடி
மறுபதில் என்பது ஏதுமின்றி - என்
மனமது வினைகளைத் தொகுத்திடுமே...
சனி, 6 ஏப்ரல், 2013
செந்தமிழ்ப் பயணம்
கடவுள் வாழ்த்து
புண்ணிய செயல்களாக்கி
புவியினை சுழலச் செய்து
திண்ணிய நெறி கொண்டோர்க்கு
திகட்டிடும் துன்பம் நீக்கி
வண்ணமென நின்றவரை
வாய் மணக்க வாழ்த்திடவோ
மனதார நினைத்திடவோ
கரமிரண்டை சிரம் மேலே
கனமாக்கி வணங்கிடவோ
முத்தொழிலும் செய்கின்றேன்
முக்கண்ணா உன் அருளால்
வேந்தன் வருகை
திண்ணமென வளர்ந்து நிற்கும்
வனப்புமிகு இளம் பெண்ணின்
கன்னமென செழித்திருக்கும்
மாங்கனியின் மாநகரம்
விண்ணளவில் மலைகள் நிற்கும்
தென்னகரின் எட்டுத் திக்கும்
சுற்றியெங்கும் சூழ்ந்து நின்று
காண்பவரின் கண்ணைச் சொக்கும்
ஏரிக்காடு இங்கிருக்கும்
கோரிமேடு அருகிருக்கும்
குடகுமலை காவிரியும்
வளைகுடாவை பார்த்திருக்கும்
கொங்கு நாட்டுக் கிழக்காலே
செயில் அங்கு உருக்காலை
மாநிலத்தின் மண்ணினிலே
மாமரங்கள் நிறைந்திருக்கும்
சேலம் மாநகரினிலே
தமிழ்வேந்தன் வாழ்ந்து வந்தான்
தொடரும்......
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)